ஜனாதிபதியை சந்தித்த சீன இராஜதந்திரி

Published By: Vishnu

21 Dec, 2022 | 08:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் கடன் நிலை, இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் தொடர்பில் சமீபத்திய காலமாக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளை இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் மதிப்பீடு செய்தார்.

சீன அரசாங்கம் மற்றும் சீன வங்கிகள் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய்யிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கையின் அரசமுறை கடன்களை நிலையான தன்மையில் பேண்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சமீபத்திய இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை சீன பதில் தூதுவர் இச்சந்திப்பின் போது மதிப்பீடு செய்துள்ளார்.

சீன அரசாங்கம் மற்றும் சீன வங்கிகள் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என சீன பதில் தூதுவர் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களின் பிரதிநிதிகளுக்கும். இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூன்றாம் சுற்று நிறைவு பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் தனித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறுகிய மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் பொது பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21