வார்தா புயல் பாதித்த சில பகுதிகளுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையொட்டி நேற்று மதியம் 12 மணியளவில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் மாளிகைக்கு வந்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்கவும், மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் பாடி பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து மாத்தூர் சென்ற முதலமைச்சர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்துவிட்டு, பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு அருந்தினார்.
அதை தெரிந்துகொண்ட பெரியபாளையம் நெடுஞ்சாலை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து உணவகத்தின் வாசல் முன்பு கூடினர்.
தங்கள் பகுதிகளில் பல வருடங்களாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை அதிகாரிகளிடம் இதைபற்றி கூறியும் அவர்கள் அதை சரி செய்யவில்லை. இதனால் முதல்வர் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிட்டு, அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து தந்தால் தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று அவர்கள் கூறினர்.
இதை உணவகத்தில் இருந்து பார்த்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுமக்கள் அருகே வந்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை உடனே நிவர்த்தி செய்ய தலைமை செயலாளர் ராமமோகன ராவுக்கு உத்தரவிட்டார்.
அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடுக்கு சென்றார். அங்கே பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் அளித்த மனுக்களை வாங்கி படித்து பார்த்துவிட்டு, கூடிய விரைவில் உங்கள் பிரச்சினை சரிசெய்யப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.
அதன்பின்பு, அங்குள்ள முகத்துவாரத்துக்கு (ஏரி) சென்று பார்வையிட்டார். அதை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை பார்த்த சந்தோஷத்தில் அவரை பொதுமக்கள் சுற்றிக்கொண்டனர். அவர்களிடம் முதலமைச்சர் கை குலுக்கி பேசினார். அதன்பின்பு அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் பொன்னேரி பகுதியில் புயலினால் பாதிக்கப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை பார்த்து ஆறுதல் சொல்லி, நிவாரண உதவிகளை வழங்கினார்.
கத்திவாக்கம் பகுதியில் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவை பரிசோதித்த அவர் அங்குள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற முதலமைச்சர், பாதிப்பு குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தார். அதன்பின்பு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவும், நிவாரண பணிகளை தொய்வில்லாமல் வழங்கவும் உத்தரவிட்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM