அமெரிக்காவில் கொரோனா பரவல் அச்சமுள்ள சூழலில் காய்ச்சல் தடுப்பு மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு

Published By: Digital Desk 2

21 Dec, 2022 | 03:49 PM
image

அமெரிக்காவில் கொரோனா தொற்று உட்பட மூன்று வித பாதிப்புகளை முன்னிட்டு காய்ச்சல் தடுப்பு மருந்து விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் இரண்டரை ஆண்டுகளாக கடுமையாக பாதித்திருந்த நிலையில், அண்மைக் காலங்களாக அதில் இருந்து ஓரளவு விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

பெருந்தொற்றுக்கு பின்னான முதல் குளிர்கால சூழலை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். எனினும், கொரோனா பாதிப்புகள் சமூக மட்டங்களில் அதிகரித்தே காணப்படுகிறது. இந்த சமூக பரவலான பகுதிகளில் அந்நாட்டவர் 14 சதவீதத்தினர் வசிக்கின்றனர்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி பைடன், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குளிர்காலத்தில் அதனை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் தேவை என அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், 

நாட்டில் புளூ காய்ச்சல், கொரோனா பாதிப்பு மற்றும் சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸின் தொற்று (ஆர்.எஸ்.வி.) ஆகிய மூன்று வித பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழல் காணப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இந்த ஆர்.எஸ்.வி. பாதிப்பு குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 6 மாதங்கள் முதல் இளையவர்கள் வரை அதிக பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. அவர்களில் பலருக்கும், நோயெதிர்ப்பு சக்தி இன்னும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டு மக்கள் அதிகளவில் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வாங்கி வருகின்றனர். இதற்காக மருந்து கடைகளில் கூட்டம் கூடுகிறது. ஆன்லைனிலும் மக்கள் ஆர்டர் செய்து வருகின்றனர்.

ஆனால், சில்லரை வர்த்தகத்தில் இந்த மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளன என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி காய்ச்சல் தடுப்பு மருந்து உற்பத்தியில் ஈடுபடும் வால்கிரீன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கடையில் இருப்பு உள்ள மருந்துகளின் விவரங்களை நாள் முழுவதும் தங்களது வலைதளங்களில் பகிர்ந்து வருகிறோம்.

காய்ச்சல் தடுப்பு மருந்துகளுக்கு தேவை அதிகரித்து உள்ளது. அதனால், நாடு முழுவதும் உள்ள சில்லரை வர்த்தகர்களால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை என தெரிவித்து உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என கூறியுள்ளது.

எனினும், காய்ச்சல் தடுப்பு மருந்து உற்பத்தியில் ஈடுபடும் சி.வி.எஸ். என்ற மற்றொரு நிறுவனம் இந்த மருந்துகளை கடைகளில் விற்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதன்படி, ஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு மருந்துகளே விற்க அனுமதி அளிக்கிறது.

வால்கிரீன்ஸ் நிறுவனம், கூடுதல் கொள்முதலை தவிர்க்க ஆன்லைன் வழியே நபர் ஒருவருக்கு 6 மருந்துகளை விற்க அனுமதிக்கிறது.

சீனாவில் குளிர்காலத்தில், கடும் பாதிப்புகளை நாட்டு மக்கள் எதிர்கொள்ள கூடிய அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், அரசு தடுப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்தியா உள்பட பிற நாடுகளும், குளிர்கால தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தி தீர்வு ஏற்பட முயன்று வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்காவில் கொரோனா தொற்று உட்பட மூன்று வித பாதிப்புகள் பரவ கூடிய சூழலில் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வாங்குவதில் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48