ஹெரோயினுடன் கைதான பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

Published By: Vishnu

21 Dec, 2022 | 03:14 PM
image

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குடும்ப பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான குடும்ப பெண்  தொடர்பிலான வழக்கு  கடந்த வெள்ளிக்கிழமை (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது கைதான சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹெரோயின் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்தவர்  குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாகவும் அத்துடன் சந்தேக நபர் குடும்ப பெண் எனவும் அவரது கணவன் நோயுற்ற நிலையில் காணப்படுவதாகவும் பெண் பிள்ளைகள் பராயமடையாமல் உள்ள நிலைமைகளை மன்றிற்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

இதற்கமைய சந்தேக நபர்  சார்பில்  ஆஜரான சட்டத்தரணியின்  சமர்ப்பணம் விண்ணப்பங்களை  ஆராய்ந்து  நீதிவான்    சந்தேக நபருக்கு 9999 ரூபா தண்டப்பணம் மற்றும் 1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டணை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குடும்ப பெண் 350 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31