தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ் - கண்டி பெல்கன்ஸ்: நீக்கல் போட்டியில் கலம்போ ஸ்டார்ஸ் - கோல் க்ளடியேட்டர்ஸ்

Published By: Digital Desk 5

21 Dec, 2022 | 01:08 PM
image

(நெவில் அன்தனி)

லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் 3ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள முதலாவது அணியைத் தீர்மானிக்கும் தகுதிகாண் போட்டியும் இறுதிச் சுற்றிலிருந்து வெளியேறவுள்ள முதலாவது அணியைத் தீர்மானிக்கும் நீக்கல் போட்டியும் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரண்டு கட்டங்களைக் கொண்ட 3ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி நிறைவுபெற்றது.

20 லீக் போட்டிகள் முடிவில் கண்டி பெல்கன்ஸ் 7 வெற்றிகள், 1 தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 14 புள்ளிகளையும் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் 6 வெற்றிகள், 2 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 12 புள்ளிகளையும் கலம்போ ஸ்டார்ஸ் 3 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளையும் நடப்பு உபசம்பியன் கோல் க்ளடியேட்டர்ஸ் 2 வெற்றிகள், 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளையும் பெற்று அணிகள் நிலையில் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் இடங்களைப் பெற்று இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது தகுதிகாண் போட்டியில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸை கண்டி பெல்கன்ஸ் எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி 23ஆம் திகதி நடைபெறவுள்ள எல் பி எல் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.

இந்த வருட பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த இரண்டு அணிகளில் கண்டி பெல்கன்ஸ் சற்ற பலம்வாய்ந்த அணியாகவும் வெற்றிபெறக்கூடிய அணியாகவும் தென்படுகிறது.

மேலும் இந்த இரண்டு அணிகளும் இம்முறை நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் கண்டி பெல்கன்ஸ் முறையே 3 விக்கெட்களாலும், 10 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், மூன்றவாது தொடர்ச்சியான தடவையாக சம்பியனாவதற்கு முயற்சிக்கவுள்ள நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் இன்றைய போட்டியை நழுவ விடும் என எதிர்பார்க்க முடியாது.

Avishka Fernando struggled to score quickly, hitting 32 in 31 balls, Jaffna Kings vs Colombo Stars, Lanka Premier League, Pallekele, December 12, 2022

ஜெவ்னா கிங்ஸ் அணியில் அவிஷ்க பெர்னாண்டோ (268 ஓட்டங்கள்), சதீர சமரவிக்ரம (235 ஓட்டங்கள்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (203 ஓட்டங்கள்), ஷொயெப் மாலிக் (137 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் (10 விக்கெட்கள்), பினுர பெர்னாண்டோ (10 விக்கெட்கள்), ஜேம்ஸ் ஃபுல்லர் (10 விக்கெட்கள்), மஹீஷ் தீக்ஷன (7 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

James Fuller returned 2 for 28 off his four overs, Jaffna Kings vs Kandy Falcons, LPL 2022, Pallekele, December 14, 2022

Shoaib Malik and Dunith Wellalage scored 30 each as Jaffna Kings were bowled out for 137, Jaffna Kings vs Galle Gladiators, LPL 2022, Hambantota, December 6, 2022

Rahmanullah Gurbaz struck 73 off 35, Jaffna Kings vs Dambulla Aura, Lanka Premier League, Pallekelle, December 11, 2022

கண்டி பெல்கன்ஸ் அணியில் அண்ட்ரே ஃப்ளெச்சர் (264 ஓட்டங்கள்), அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (211 ஓட்டங்கள்), பெத்தும் நிஸ்ஸன்க (192 ஓட்டங்கள்), அஷேன் பண்டார (191 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் கார்லோஸ் ப்றத்வெய்ட் (15 விக்கெட்கள்), ஃபேபியன் அலன் (10 விக்கெட்கள்), வனிந்து ஹசரங்க டி சில்வா (10 விக்கெட்கள்) ஆகியயோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.

Wanindu Hasaranga took the first hat-trick in the history of the Lanka Premier League, Colombo Stars vs Kandy Falcons, LPL 2022, Hambantota, December 6, 2022

Carlos Brathwaite picked up his T20 career-best four-for, Galle Gladiators vs Kandy Falcons, LPL 2022, Hambantota, December 7, 2022

Ashen Bandara's cameo gave Kandy Falcons a strong finish, Kandy Falcons vs Dambulla Aura, LPL 2022, Pallekele, December 13, 2022

Kusal Mendis punches off the back foot, Galle Gladiators vs Jaffna Kings, LPL 2022, Colombo, December 18, 2022

இன்றைய போட்டியிலும் இந்த வீரர்கள் தத்தமது அணிகளின் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலம்போ  ஸ்டார் ஸ் எதிர் கோல் க்ளடியேட்டர்ஸ்

தகுதிகாண் போட்டிக்குப் பின்னர் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது நீக்கல் போட்டியில் கலம்போ ஸ்டார்ஸ் அணியை கோல் க்ளடியேட்டர்ஸ் அணி சந்திக்கவுள்ளது.

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதலாவது தகுதிகாண் போட்டியில் தோல்வி அடையும் அணியை நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் சந்திக்கும்.

அதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாட 2ஆவது அணியாகத் தகுதிபெறும்.

இன்று நடைபெறவுள்ள நீக்கல் போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளும் எதிர்பார்த்தளவு லீக் சுற்றில் பிரகாசிக்காததுடன் அவற்றின் பெறுபேறுகள் திருப்திகரமாக இல்லை. எனினும் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றியைக் குறிவைத்து விளையாடும் என்பது நிச்சயம்.

Niroshan Dickwella slogs to the leg side, Colombo Stars vs Galle Gladiators, LPL 2022, Pallekele, December 11, 2022

Angelo Mathews hit 73 off 38, Jaffna Kings vs Colombo Stars, Lanka Premier League, Pallekele, December 12, 2022

Dinesh Chandimal made 63 off 33 balls, Galle Gladiators vs Colombo Stars, Lanka Premier League, Pallekelle, December 13, 2022

கலம்போ  ஸ்டார் ஸ்  அணியில் தினேஷ் சந்திமால் (187 ஓட்டங்கள்), அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் (160), சரித் அசலன்க (137 ஓட்டங்கள்), நிரோஷன் திக்வெல்ல (127), ரவி பொப்பாரா (126 ஓட்டங்கள்) ஆகியயோர் துடுப்பாட்டத்தில் முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுள்கு அவ்வணியில் எவரும் சிறப்பாக செயற்படவில்லை. கசுன் ராஜித்த (6 விக்கெட்கள்), ஜெவ்றி வெண்டர்சே, நவீன் உல் ஹக், டொமினிக் ட்ரேக்ஸ் (மூவரும் தலா 5 விக்கெட்கள்) ஆகியோர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

கோல் க்ளடியேட்டர்ஸ் சார்பாக அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (252 ஓட்டங்கள்), நுவனிது பெர்னாண்டோ (203 ஓட்டங்கள்), தானுக்க தாபரே (152 ஓட்டங்கள்) ஆகிய மூவரே 150 ஓட்டங்களுக்குமேல் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் நுவன் துஷார (14 விக்கெட்கள்), நுவன் ப்ரதீப் (10 விக்கெட்கள்), வஹாப் ரியாஸ் (8 விக்கெட்கள்) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது முதல் போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் 25 ஓட்டங்களாலும் 2ஆவது போட்டியில் கலம்போ ஸ்டார்ஸ் 2 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தன. எனவே இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்று எதிர்வு கூறுவது இலகுவானதல்ல. எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் சிட்டி எவ்.ஏ. கிண்ண சம்பியனானது!

2023-06-04 17:17:41
news-image

இரண்டாவது போட்டியில் இலங்கை 323 ஓட்டங்கள்...

2023-06-04 16:10:20
news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26