தமது நிலத்தை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்ய உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டை பிரதேசவாசிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு கதிர்காம பிரதான வீதியை மறித்து மிரிஜாவில சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கொழும்பு கதிர்காமத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.