முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மாந்தை கிழக்கு மற்றும் மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாவட்ட செயலகம் உள்ளிட்ட முக்கிய தேவைகள் நிமித்தம் முல்லைத்தீவு நகருக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரச அலுவலகங்களுக்கு செல்லும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி தினமும் அல்லல் படுகின்றனர்.
காலை வேளையில் ஒருசில பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதால் உரிய நேரத்தில் கடமைக்களுக்கு தேவைகளுக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே உரிய தரப்பினர் பேருந்து சேவைகளை அதிகரித்து இருக்கிற சேவைகள் தடையின்றி நடத்த ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் (22) அரச பேருந்து சேவை ஒன்று நிறுத்தப்பட்டதால் (இடையில் பழுதடைந்தமையால்) ஒட்டுசுட்டான் நோக்கி செல்பவர்கள் மாங்குளத்தில் அவதி
இது தொடர்ச்சியாக இடம்பெறுவதால் இருக்கும் சேவைகளை உரிய முறையில் வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM