'சேட்டை தாங்கமுடியவில்லை' ; குரங்கை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற நபர்

Published By: Digital Desk 2

21 Dec, 2022 | 05:12 PM
image

குரங்குகளின் சேட்டையால் விரக்தியடைந்த நபர் ஒருவர் அங்கிருந்த குரங்கை பிடித்து தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி  பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்த விநோத சம்பவம் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் நீண்ட நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றிவந்த குரங்குகள் அங்கு வசிப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்துவந்துள்ளது.

குரங்குகளை விரட்ட வழிதெரியாமல் விரக்தியடைந்த குடியிருப்புவாசி ஒருவர், தனது வீட்டு ஜன்னலில் அமர்ந்திருந்த குரங்கை பிடித்து, தனது மோட்டார் சைக்கிளில்  ஏற்றி, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். பிடிக்கப்பட்ட குரங்கும், அமைதியாக பின் இருக்கையில் அமர்ந்தவண்ணம் அவருடன் சென்றுள்ளது.

பின்னர் பொலிஸாரிடம் குரங்குகளின் அட்டகாசம் குறித்து எடுத்துக்கூறி, தான் பிடித்துவந்த குரங்கை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துச் சென்றுள்ளார். பிடிபட்ட குரங்கை பொலிஸார் காட்டுப்பகுதியில் விடுமாறு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அந்த ஸ்மார்ட் குரங்கு, வனத்துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்கரைச் சேர்ந்த அந்த நபர் குரங்கை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் கண்மூடித்தனமான கைதுகள் - ஐநாவின்...

2023-03-25 09:11:27
news-image

கொலை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்குள் நுழைந்த...

2023-03-23 16:20:47
news-image

லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற...

2023-03-22 16:12:31
news-image

என்ன ஒரு துணிச்சல்...! முதலையை விரட்டியடித்த...

2023-03-18 16:35:26
news-image

லொறிகளை வழிமறித்து கரும்பைச் சுவைத்த காட்டு...

2023-03-09 13:02:12
news-image

கேரட்டை இசைக்கருவியாக மாற்றிய அவுஸ்திரேலிய இசைக்கலைஞர்

2023-03-07 16:49:45
news-image

பிரபல மொடல் நயோமி கம்பெல் தன்னுடன்...

2023-03-04 16:12:09
news-image

முள்ளம்பன்றியும் மாக்பி பறவையும்

2023-02-24 14:57:51
news-image

மனைவி மீது கொண்ட காதலை விசித்திரமான...

2023-02-22 10:38:10
news-image

மட்டுநகர் வாவியில் வெளிநாட்டுப் பறவைகள்

2023-02-21 16:25:38
news-image

காதலர் தினத்தில் கின்னஸ் உலக சாதனை...

2023-02-17 10:59:27
news-image

காதலர் தினத்தை பசு காதல் தினமாக...

2023-02-15 09:39:03