விஜய் அண்டனியின் 'பிச்சைக்காரன் 2' அப்டேட்

Published By: Digital Desk 5

21 Dec, 2022 | 11:28 AM
image

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி தயாரித்து இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் 'பிச்சைக்காரன் 2' எனும் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் அண்டனி நடிப்பில் 'அக்னி சிறகுகள்', 'காக்கி', 'கொலை', 'ரத்தம்', 'மழை பிடிக்காத மனிதன்', 'வள்ளிமயில்' என ஐந்துக்கும் மேற்பட்ட படங்களின் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

இருப்பினும் இந்த ஆண்டு விஜய் அண்டனி நடிப்பில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவரின் நடிப்பில் தயாராகி மூன்று ஆண்டுகாலமாக கிடப்பில் இருந்த 'தமிழரசன்' எனும் திரைப்படம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அன்றைய திகதியில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவதால், இந்த திரைப்படம் வெளியாகுமா..? என உறுதியாக தெரியவில்லை என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் இசை அமைப்பாளராகவும், நடிகராகவும், படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி, தன் திறமையை நிரூபித்த விஜய் அண்டனி, தற்போது 'பிச்சைக்காரன் 2' எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அந்த சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக இந்த படக்குழுவிற்கு காவல்துறை அபராதமும், எச்சரிக்கையும் விடுத்தது .

'பிச்சைக்காரன் 2 'படத்தை பற்றிய எதிர் நிலையான தகவல்கள் பரவுவதை கண்டு அச்சமடைந்த படக்குழு, தற்போது படத்தை பற்றிய புதிய தகவலை வெளியிட்டிருக்கிறது.

அந்த வகையில் விஜய் அண்டனி இயக்குநராக அறிமுகமாகும் 'பிச்சைக்காரன் 2 ' அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பிரத்யேக போஸ்டர் ஒன்றினையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00
news-image

நடிகை அஞ்சலி நடிக்கும் 'ஈகை' பட...

2023-05-30 12:43:42
news-image

‘எல். ஜி. எம்' படத்தின் செகண்ட்...

2023-05-30 12:37:36
news-image

'வீரன்' படத்தில் நடித்ததை விட கற்றது...

2023-05-30 12:37:09
news-image

அஜித் குமாருக்கு ஜோடியாகிறாரா திரிஷா...!?

2023-05-30 12:34:40
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51