புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு: மனைவியை பிரிந்த சோகத்தால் எடுத்த முடிவு

Published By: Nanthini

21 Dec, 2022 | 11:03 AM
image

யிலங்குளம் பொலிஸ் பிரிவில் மாதோட்டம் புகையிரத நிலையத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி வந்த புகையிரதத்துக்கு முன்னால் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து, உயிரிழந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (டிச. 19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் குடும்பப் பிரச்சினை காரணமாகவே  புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் உயிரிழந்தவர் உயிலங்குளம் பகுதியின் மணற்குளம் தண்ணீர்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான நல்லத்தம்பி நகுலேஸ்வரன் (வயது 37) என்பவரே ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் தெரியவருவதாவது:

குறித்த புகையிரதம் தலைமன்னார் நோக்கி வந்துகொண்டிருந்தபோது குறித்த நபர் தலைக்கவசம் அணிந்தவாறு மதுபோதையில், ரயில் பாதையிலுள்ள கட்டையில் பியர் போத்தலுடன் உட்கார்ந்திருந்துள்ளார்.

அவ்வேளை புகையிரதம் வந்துகொண்டிருக்க, புகையிரத சாரதி புகையிரத பாதையில் நபரொருவர் அமர்ந்திருப்பதை கண்டு, புகையிரத ஒலியை ஒலிக்கச் செய்ததோடு, புகையிரதத்தின் வேகத்தையும் குறைத்துள்ளார். 

இந்நிலையில், புகையிரதம் அருகில் வந்ததும்  அதன் முன்னால் பாய்ந்து, உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அதனையடுத்து, சடலம் அந்த புகையிரதத்தில் ஏற்றிச்செல்லப்பட்டு, மன்னார் புகையிரத நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, அப்புகையிரதம் புறப்பட்டுள்ளது.

பின்னர் சடலமானது மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ. குமணகுமார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவரின் மனைவி வாக்குமூலம் அளிக்கையில், 

தங்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், குடும்ப பிரச்சினையால் தானும் கணவரும் சுமார் எட்டு மாதங்களாக பிரிந்திருப்பதாகவும், கணவர் மது அருந்துவதால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு, பொலிஸ் நிலையத்தில் பல முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே தாம் பிரிந்து வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், குடும்பத்தை விட்டுப் பிரிந்துவந்து, சில காலம் தன்னுடன் வசித்து வந்ததாக விசாரணையின்போது கூறிய உயிரிழந்தவரின் தாயார், தன் மகன் மனைவியுடன் சேர்ந்து வாழ முற்பட்டும், அவரது விருப்பம் கைகூடாத காரணத்தால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு உயிரிழந்தவரின் மனைவி கணவரை பிரிந்து வாழும் நிலையில், மகனின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி தாய் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சடலத்தை தாயாரிடம் ஒப்படைக்கும்படி, மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44