வட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை அழிக்க புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வட்ஸ்அப்பில் புதிய அம்சத்தில் 'Delete for everyone' கொடுப்பதற்கு பதிலாக 'delete for me' கொடுத்துவிட்டு வருந்துபவர்களுக்காக அதனை பின் வாங்கும் அம்சமாக 'Undo' அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்-அப்பில் பொதுவாக நாம் செய்யும் தவறு புகைப்படங்களை மற்றும் செய்திகளை மாற்றி வேறொருவருக்கோ, அல்லது வேறொரு குழுவுக்கோ அனுப்பி விடுவோம். சில சமயங்களில் அது மிகப்பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். நண்பர்கள் குழுவில் அனுப்பவேண்டியதை குடும்ப உறவினர்கள் குழுவுக்கோ, தொழில் செய்யும் உறுப்பினர் குழுவுக்கோ அனுப்பிவிட்டால் பெரும் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
இதுபோன்ற பிரச்சனைகளை களைவதற்குதான் வட்ஸ்-அப் 'delete for everyone' அம்சத்தை கொண்டு வந்தது. ஆனால் ஒரு செய்தியை செலக்ஸ்ட் செய்து அழிக்கும் போது இரண்டு அம்சங்கள் காட்டும், ஒன்று ''Delete for me' மற்றொன்று 'delete for everyone'.
இதில் Delete for everyone கொடுத்தால்தான் எல்லோருக்கும் அழிந்து விடும். Delete for me கொடுத்தால் நமக்கு மட்டும் செய்தி அழியும். ஆனால் தவறாக அனுப்பிய பிறகு பலரது மனம் அமைதியாக இருக்காது, கைகள் துரிதப்படும். அந்த நேரத்தில் ''Delete for me' ஐ தவறுதலாக தெரிவு செய்துவிடுவது ஒரு மிகப்பெரிய சாபமாக பல காலங்களாக இருந்து வருகிறது. அப்படி செய்து விட்டால் அந்த செய்தி சென்ற தடமே நம் கைத்தொலைபேசியில் இருக்காது. அது இருந்தால்தான் லாங் பிரெஸ் செய்து Delete for everyone ' கொடுக்க முடியும்.
இந்த ஆபத்தும் பலருக்கு நிகழ்ந்து பல பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனை சரி செய்யவே வட்ஸ்ஆப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் நாம் Delete for me ஐ தெரிவு செய்யும்போது, அதன் பிறகு ஒரு ஐந்து வினாடி கீழே ஒரு பாப்-அப் செய்தி நிற்கிறது. அதில் 'message deleted for me' என்று எழுதப்பட்டு பக்கத்தில் 'UNDO' என்ற அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் தவறுதலாக செய்திருந்தால் ஐந்து வினாடிக்குள் சரி செய்துகொள்ள முடியும். அந்த அண்டூ பட்டனை கிளிக் செய்தால் டெலிட் செய்த மெசேஜ் திரும்பவும் வந்துவிடும், நாம் மீண்டும் தெரிவு செய்து சரியான முறையில் 'Delete for everyone' கொடுத்துக் கொள்ளலாம். இதே போல வாட்ஸ்ஆப் மேலும் பல புதிய அப்டேட்களை கொண்டு வந்துள்ளது.
மற்றைய அம்சங்கள்
- அவதார் என்ற அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களுக்கான அவதாரங்களை உருவாக்கி அதைத் தங்கள் டிபி-யாக அமைக்க முடியும். இந்த அம்சம் சமீபத்திய ஐஓஎஸ் மற்றும் அண்ரோய்ட் புதுப்பிப்புகளுடன் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- மேலும் வாட்ஸ்-அப் தற்போது ஆண்ட்ரோய்ட் பயனர்களுக்காக 21 புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்துள்ளது. ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய செய்தியும் தற்போது அனுப்ப முடியும்.
- ஒருமுறை அந்த செய்தியைப் பெறுபவர் அதைப் படித்த பிறகு மறைந்துவிடும். ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்க முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM