இலங்கை, மாலைதீவுகள் மற்றும் மத்திய கிழக்கில் பிரசன்னத்தைக் கொண்ட முன்னணி மென்பொருள் தீர்வுகள் வழங்குநரான Perfect Business Solution Services (Pvt) Ltd (PBSS), அண்மையில் நடைபெற்ற தொழில் முயற்சியாளருக்கான விருதுகள் 2016 நிகழ்வில் மேல் மாகாணத்துக்கான தங்க விருதையும்ரூபவ் தேசிய மட்டத்தில் வெள்ளி விருதையும் தனதாக்கியிருந்தது.

மத்திய பிரிவில் இந்த விருதுகளை தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் (FCCISL) ஏற்பாடு செய்யப்பட்டுரூபவ் டிசம்பர் 7 ஆம் திகதி நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் நாடு முழுவதையும் சேர்ந்த பெருமளவான சிறிய நடுத்தரளவு நிறுவனங்கள் பல நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டிருந்தன.

PBSS ன் முகாமைத்துவ பணிப்பாளர் மதுர கமநாயக்க கருத்துத்தெரிவிக்கையில்,

“FCCISL தொழில் முயற்சியாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில்ரூபவ் தேசிய விருது வழங்கப்பட்டிருந்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த 14 வருட காலமாக எமது பயணத்துடன் இணைந்துள்ள எமது சகல ஊழியர்கள், பங்காளர்கள் மற்றும் பங்குதாரர்கள் என அனைவருக்கும் கிடைத்த கௌரவமாக இது அமைந்துள்ளது.

நாம் நாளாந்தம் வளர்ந்து வருகிறோம்ரூபவ் எமது திட்டங்கள் மற்றும் வழங்கல்கள் ஆகியன விஸ்தரிக்கப்படுவதுடன், ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும் இது போன்ற சாதனைகளை புரிவோம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.

“மாற்றத்துக்கான புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை” எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு 21 ஆவது ஆண்டாகவும் நடைபெற்றது. சகல கடுமையான உழைப்புக்கும் கிடைத்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளதுடன் போட்டிகரமான சூழலில் சவால்களை சமாளிப்பது தொடர்பிலும் அமைந்துள்ளது.

ISO சான்றளிக்கப்பட்ட வியாபார நிறுவனம் எனும் வகையில்ரூபவ் அவர்களின் சொந்த தயாரிப்புகள் வெவ்வேறு துறைகளுக்கு பங்களிப்புகளை வழங்கி வருகின்றன. PBSS என்பது இன்றைய கால கட்டத்திலும் Sage மற்றும் SAP Business One solutions ஆகியவற்றை ஒன்றிணைத்து தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை உலகத்தரம் வாய்ந்த வகையில் உள்நாட்டில் மேற்கொண்டு வருகிறது.

சிறிய முதல் பெரிய வியாபாரங்களுக்கான வர்த்தக மட்ட HRM தீர்வான ‘Perfect Pay/HRM’ என்பதை அறிமுகம் செய்திருந்தது. அதன் தயாரிப்புகளில் SAP Business One ERP, Sage Evolution ERP, Sage 50 (Peachtree), Sage My Business, POS Solutions, HRM Solutions, Payroll மற்றும் TAS Solutions, various Perfect Integrations for ERP போன்றன அடங்கியுள்ளன. அத்துடன் மேலும் ஏனைய தயாரிப்புகள் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பிரிவுகளுக்கு பங்களிப்புகளை வழங்குகின்றன. PBSS இனால் School Management Solutions, Service Manager & Work Shop Management, Advanced Job Costing, Fleet Management etc போன்றனவும் வழங்கப்படுகின்றன. நிறுவனத்தினால் பயிற்சி நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதுடன் இலங்கை, மாலைதீவுகள் மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.

2002ல் நிறுவப்பட்ட PBSS, 600 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. Sage Evolution ERP யின் சிறந்த 10 அமைப்புகளின் சுப்பர் பிளாட்டினம் பங்காளராக நிறுவனம் திகழ்கிறது. இலங்கை மற்றும் மாலைதீவுகளில் 110க்கும் அதிகமான நுசுP செயற்படுத்தல்களை கொண்டுள்ளது. சிறியளவிலான தீர்வுகளின்றிரூபவ் பரிபூரண வியாபார முகாமைத்துவ தீர்வுகளாக நிதியியல்ரூபவ் விற்பனை, வாடிக்கையாளர்கள், சரக்கிருப்பு மற்றும் செயற்பாடுகள் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.