யுக்ரைன் ஜனாதிபதி இன்று அமெரிக்கா செல்கிறார் : ரஷ்ய படையெடுப்பின் பின் முதல் வெளிநாட்டுப் பயணம்

Published By: Sethu

21 Dec, 2022 | 09:36 AM
image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலேன்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் இன்று புதன்கிழமை சந்திக்கவுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், யுக்ரைனுக்கான இராணுவ உதவிகள் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்படும் எனவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பேச்சுவார்த்தை விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஸெலென்ஸி உரையாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் ஜனாதிபதி ஸெலேன்ஸ்கி யுக்ரைனுக்கு வெளியே பயணம் செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் வீடியோ மூலம் மாநாடுகளில் உரையாற்றியுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பாக வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.  அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலேலோயஸியும் இது குறித்து விபரங்களைவெளியிடவில்லை. எனினும், புதன்கிழமை இரவு பாராளுமன்றத்துக்கு சமுகமளிக்குமாறு பாராளுமன்ற அங்கத்தவர்களை அவர் கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32