(எம்.மனோசித்ரா)
தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளமையானது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கும். நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டமைக்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்க வேண்டும்.
புதிய அரசியல் யுகத்தை உருவாக்கும் இயலுமை ஐக்கிய மக்கள் சக்திக்கு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடலில் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு முன்னர் சாதாரண மக்கள் எதிர்நோக்கியுள்ள துன்பம் குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம்.
காரணம் தமது பிள்ளைகளுக்கு அடுத்த ஆண்டுக்கு தேவையான அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களைக் கூட வாங்க முடியாத நிலைமையிலேயே பெற்றோர் உள்ளனர். இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது தேசிய பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரபல வர்த்தகர் பொது வெளியில் கொலை செய்யப்படும் சூழல் இலங்கையில் காணப்பட்டால் , வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவ்வாறு நாட்டுக்கு வருகை தருவார்கள்? அவர்களது உயிருக்கு உத்தரவாதம் என்ன? இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டும்.
பாடசாலை மாணவர்களிடத்தில் எவ்வாறு போதைப்பொருள் செல்கிறது என்ற விடயத்தைக் கூட அறியாத நிலையிலா பாதுகாப்பு அமைச்சு காணப்படுகிறது.
இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். தற்போதுள்ள அரசியல் கலாசாரங்களை மாற்றி , புதிய அரசியல் யுகத்தை உருவாக்கும் இயலுமை ஐக்கிய மக்கள் சக்திக்கு காணப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM