(எம்.ஆர்.எம்.வசீம்)
மொட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிப்பட்ட ரீதியில் எனக்கு இணக்கம் இல்லை என்றாலும் கட்சி என்ற அடிப்படையில் கூட்டணி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஏனெனில் அரசியலில் நிரந்தர விராேதிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (டிச. 20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானாலும் இந்த அரசாங்கமோ அமைச்சரவையோ பாராளுமன்றமோ ரணில் விக்ரமசிங்கவுடையது அல்ல. அதனால் மிகவும் சவால்களுக்கு மத்தியிலேயே நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டு செல்கின்றார்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை மாற்றமடைந்து சுமுகமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. ரணிவ் விக்ரமசிங்கவின் அனுபவம் மற்றும் தூரநோக்கு சிந்தனையாலே இதனை செய்ய முடியுமாகு இருக்கின்றது.
அத்துடன் பொருளாதார நிலைமை ஓரளவு ஸ்திரமடையும்பாேது தேர்தலுக்கு செல்வதே எமது நிலைப்பாடாகும். எவ்வாறு இருந்தாலும் அடுத்த வருடம் தேர்தல் வருடமாக அமையும் என எதிர்பார்க்கலாம். தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கே திட்டமிட்டுள்ளோம். சஜித் பிரேதமாசவின் கட்சி எங்களுடன் இணைந்துகொள்ளுமாக இருந்தால் அதனை நாங்கள் மனதால் வரவேற்போம். அவர்கள் எங்களுடன் இருந்தவர்கள். அதனால் அவரகளுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியில் பாரிய வித்தியாசம் இல்லை.
மேலும் மொட்டு கட்சியுடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. என்றாலும் மொட்டு கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்பதில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் இணக்கம் இல்லாவிட்டாலும் கட்சி என்ற ரீதியில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஏனெனில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண ஆதரவை வழங்கி வருவது மொட்டு கட்சியாகும். அரசியலில் தவறு, பிழை செய்பவர்கள் இருக்கலாம். அதற்காக யாரையும் நிரந்தரமாக ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அரசியலில் நிரந்தர விராேதிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை.
அத்துடன் மொட்டு கட்சியை மக்கள் எந்தளவு விமர்சித்தாலும் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அவர்களுக்கு 20வீத வாக்கு கிடைத்தே ஆகும். என்றாலும் கடந்த பொதுத் தேர்தலில் எமது ஆரதவாளர்கள் செய்த தவறுதான், வாக்களிக்காமல் இருந்தது.
அவர்கள் யானைக்கு அல்லது டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்திருந்தால் பாராளுமன்றத்தில் பலமுள்ள எதிர்க்கட்சியை யாவது எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும். அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கட்சியுடன் மீண்டும் ஒன்றிணைந்து, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM