மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியில்  காணாமல் போனவர்கள் இருக்கும் இடத்தை இன்று  காலை 7 மணியளவில்  அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐவரையும் தேடும்பணி  தொடர்ந்த நிலையில்  அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இராணுவத்தினருமாக ஐந்து குழுக்களாக பிரிந்து தேடும்பணியில் ஈடுபட்டுடனர்.

சிவனொளிபாதமலைக்கு சென்றுஎமில்ட்டன் காட்டுப்பகுதிக்கு சென்ற ஐவரும் எவ்வித தகவலும் இல்லாத நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அவசர பொலிஸ் தொலைபேசியூடாக காணமல்போனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காட்டுக்குள் திசைமாறியவர்களை ஹெலிகொப்படர் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐவரையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் மகன் மற்றும்  இளைஞரொருவர் உட்பட இரண்டு பெண்களும் வழிகாட்டச்சென்ற வாழமலைத்தோட்டத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவருமாக ஐவரே இவ்வாறு காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.