30 வயது பெண் ஒருவர் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்ட விநோத சம்பவம் ஒன்று இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இத்திருமணத்துக்கு விநாயகர் பூஜை, அக்கினி பூஜை எல்லாம் நடந்தது. ஆனால், இந்த விழாவில் மணமகன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால், விஷ்ணுவின் சிறந்த பக்தரான பூஜா, கடவுளவிஷ்ணுவை மணந்தார்.
குறித்த விநோத திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த்கர் அருகே உள்ள கிராமத்தில் டிசம்பர் 8ஆம் திகதி நடந்தது. பூஜாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பூஜா அழகான மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பதை காணலாம். ஏன் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது என்பதற்கு பூஜா கூறியதாவது:-
திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதற்கு பெற்றோர்களே காரணம். திருமணத்தால் தேவையற்ற மோதல்கள் போன்றவை ஏற்படும் என்றும் பூஜா கூறுகிறார்.
ஆனால், அவளைச் சுற்றியிருந்த யாரும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற அவரது முடிவை ஏற்கவில்லை. இறுதியாக அவர் கடவுள் விஷ்ணுவை மணந்தார். கோவிலில் விஷ்ணுவுக்கு உணவு படைக்கப்பட்டது. இருப்பினும், அவரது முடிவு பரவலாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், விஷ்ணுவை திருமணம் செய்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும், யார் என்ன கூறினாலும் கவலைப்படுவதில்லை என்றும் பூஜா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM