ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி மாலை 7.00 தொடக்கம் 9.00 மணிவரை நடைபெற்றது.

நாடுகடந்த இலங்கையர்களின் அரசாங்கத்தின் உதவிப்பிரதமரும் கல்வித்துறை அமைச்சருமான திரு.தவேந்திரா, வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.மாணிக்கவாசகர், மனித உரிமைகள் அமைச்சர் திரு.மணிவண்ணன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் திரு.யோகலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றியதுடன் அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு சிறப்பான கருத்துக்களையும் ஆதாரங்களையும் முன்வைப்பதற்கு இவ்வாறான கலந்துரையாடல்கள் ஏதுவாக அமையும் என பெருமளவான செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.