அபகீர்த்தியை ஏற்படுத்திய ஆசிரியரை இடமாற்றக்கோரி கிளிநொச்சியில் போராட்டம்

Published By: Vishnu

20 Dec, 2022 | 12:42 PM
image

கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட ஆசிரியரை இடமாற்ற கோரி பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற குறித்த கல்லூரியின்  ஆசிரியர்களையும் மாணவர்களையும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் முகநூல்களில் பதிவுகளை இட்ட குறித்த ஆசிரியரை இடமாற்றக்கோரி வலய  கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றிற்கு குறித்த பாடசாலையின் பெற்றோர் பழைய மாணவர்கள் ஆகியோரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், குறித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படாத  நிலையில் மேற்படி ஆசிரியர் பாடசாலை அதிபருக்கு எதிராக 19 ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைபாடுசெய்ததை கண்டித்தும் இன்றைய 20-12-2022) காலை 7மணிமுதல் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலை  நுழைவாயிலை மூடி கவனியிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முற்பட்டபோதும் நிலைமைகட்டுக்குள் கொண்டுவர முடியாது நிலையில் சம்பவ இடத்திற்கு வலயக் கல்விப்  பணிப்பாளர் சென்று சம்பந்தப்பட்டவர்களுடன்  கலந்துரையாடி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த ஆசிரியர் பொலிஸ் பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27