சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி

Published By: Sethu

20 Dec, 2022 | 12:00 PM
image

கராச்சியில் இன்று நிறைவடைந்த பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. 

இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் வென்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். 

கடந்த 17 வருடங்களின் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய இங்கிலாந்து அணி 3:0 விகிதத்தில் வென்றுள்ளது.

கராச்சியில் நடைபெற்ற 3 ஆவது போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 304 ஓட்டங்களையும் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில்  354 ஓட்டங்களையும் பெற்றன. 

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 216 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இதனால் இங்கிலாந்துக்கு 176 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணியிக்கப்பட்டது. 

போட்டியின் 4 ஆவது நாளான இன்று காலை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு  170 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வென்றது. 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களில் பென் டக்கெட் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களைப் பெற்றார். ஸாக் க்ராவ்லி 41 ஓட்டங்களையும்   பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.  

3 ஆவது போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இங்கிலாந்து வீரர் ஹரி புரூக் தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41