மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து : 25 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு

Published By: Digital Desk 2

20 Dec, 2022 | 11:03 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

அநுரதபுரம், எப்பாவல பிரதேசத்தில் கெக்கிராவ நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எப்பாவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெக்கிராவ - எப்பாவல பிரதான வீதியின் 14 கிலோ மீற்றர்  கட்டை பகுதியில்  இந்த  மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 25 வயதுடைய மரதன் கடவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனமே விபத்து ஏற்படக் காரணம் என்றும் விபத்து தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15