காதலனுக்கு முத்தமிட்ட குற்றத்திற்காக காதலிக்கு சிறைத் தண்டனை : காதலன் அடித்து கொலை

Published By: Digital Desk 2

20 Dec, 2022 | 11:15 AM
image

விவாகரத்தான 20 வயது யுவதி ஒருவர் தனது காதலனுக்கு முத்தமிட்ட குற்றத்திற்காக அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இச்சம்மவத்தையடுத்து ஆத்திரமடைந்த உறவினர் யுவதியின் காதலனை அடித்து கொலை செய்துள்ளார்.

ஆபிரிக்க நாடான சூடானில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய நாடான இங்கு பல்வேறு குற்றங்களுக்கு கை, கால்களை வெட்டுதல், கல்லால் அடித்து மரண தண்டனை வழங்குதல் போன்ற கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக திருமணம், உறவு சார்ந்த ஒழுக்கம் சார்ந்த விவகாரங்களில் கறாரான சட்ட விதிகள் தண்டனைகள் வழங்கப்படும்.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள வொயிட் நைல் மாகாணத்தில் வசிக்கும் 20 யுவதிக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகியுள்ளது. அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி இருந்துள்ளார். அவர் அந்த இளைஞருடன் இணைந்து முத்தமிட்டுக்கொண்டிருந்தபோது அந்த பெண்ணின் உறவுக்காரர் அதை பார்த்துள்ளார். இதை கண்டதும் ஆத்திரமடைந்த உறவினர்  யுவதியின் காதலனை அடித்து கொலை செய்துள்ளார்.

இந்த விவகாரம் அந்நாட்டின்  பொலிஸார் மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு சென்றுள்ளது. 

திருமணமான அந்த பெண் வேறொரு ஆணுடன் பழக்கத்தில் இருந்த காரணத்திற்காக அப்பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு சர்வதேச அளவில் பல கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், பெண்ணிடம் மறு விசாரணை செய்யப்பட்டது. அப்போது அவர், தான் அந்த இளைஞருடன் உறவில் இருந்து முத்தமிட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பெண்ணுக்கு மிக இளம் வயது என்பதால் நாட்டின் சட்ட திட்டங்கள் முறையாக தெரியவில்லை என வழக்கறிஞர் வாதாடியுள்ளார். இதை கேட்ட நீதிபதிகள் மரண தண்டனையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேவேளை, முத்தம் கொடுத்த குற்றத்திற்காக ஆறு மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து அந்த 20 வயது யுவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்