(நெவில் அன்தனி)
கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியபோதிலும் தம்புள்ள ஓரா, மூன்றாவது எல்பிஎல் அத்தியாயத்தின் இறுதிச் சுற்றில் விளையாடும் தகுதியைப் பெறத் தவறியது.
இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் தலா 4 புள்ளிகளைப் பெற்ற போதிலும் நிகர ஓட்ட வித்தியாச அடிப்படையில் கோல் க்ளடியேட்டர்ஸ் கடைசி அணியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (19) இரவு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.
கோல் க்ளடியேட்டர்ஸின் 4ஆவது விக்கெட் 7ஆவது ஓவரில் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்ததுடன் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்த வண்ணம் இருந்தது.
எனினும் மத்திய வரிசையில் நுவனிது பெர்னாண்டோ திறமையாகத் துடுப்பெடுத்தாடி 42 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களைப் பெற்று அணியை நல்ல நிலையில் இட்டார்.
அவரை விட குசல் மெண்டிஸ் (17), அஸாம் கான் (15) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
தம்புள்ள ஓரா பந்துவீச்சில் மெத்யூ போர்ட் 4 ஒவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
130 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஓரா 14.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
எவ்வாறாயினும் முதலிரண்டு விக்கெட்களை 11 ஓட்டங்களுக்கு இழந்து சிறு தடுமாற்றத்தை தம்புள்ள ஓரா எதிர்கொண்டது. ஆனால், ஜோர்டான் கொக்ஸ், மெத்யூ போர்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
கொக்ஸ் 21 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 34 ஓட்டங்களையும் போர்ட் 30 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
கொக்ஸ் ஆட்டமிழந்த பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. எனினும் சிக்கந்தர் ராஸா (17), லஹிரு மதுஷன்க (10 ஆ.இ.), சச்சித்த ஜயதிலக்க (7 ஆ.இ.) ஆகியோர் நிதானத்தைக் கடைப்பிடித்து தம்புள்ள ஓரா அணி 2ஆவது வெற்றியை ஈட்ட உதவினர்.
பந்துவீச்சில் இமாத் வசிம் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டி முடிவை அடுத்து அணிகள் நிலையில் தொடர்ந்தும் முதலிரண்டு இடங்களில் உள்ள கண்டி பெல்கன்ஸ் அணியும் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணியும் முதலாவது தகுதிகாண் போட்டியில் விளையாடவுள்ளன. கலம்போ ஸ்டார்ஸ் அணியும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணியும் நீக்கல் போட்டியில் விளையாடும். இந்த இரண்டு போட்டிகளும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM