(என்.வீ.ஏ.)
இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்றுவரும் இருதரப்பு மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 167 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியில் இன்னும் 2 தினங்கள் எஞ்சியிருப்பதுடன் 8 விக்கெட்கள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 55 ஓட்டங்களே தேவைப்படுகிறது.
இதன் காரணமாக இங்கிலாந்து இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக (3 - 0) கைப்பற்றும் என நம்பப்பபடுகிறது.
பென் டக்கட் 50 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் 354 ஓட்டங்களைப் பெற்று 50 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.
2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மோசமாக துடுப்பெடுத்தாடி 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் சார்பாக அணித் தலைவர் பாபர் அஸாம், அகா சல்மான் ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.
இங்கிலாந்து சார்பாக ஹெரி ப்றூக் சதம் குவித்ததுடன் ஒல்லி போப், பென் போக்ஸ் ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்று அணியைப் பலப்படுத்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் சார்பாக பாபர் அஸாம், சவூத் ஷக்கீல் ஆகிய இருவர் அரைச் சதங்களைப் பெற்றபோதிலும் ஏனையவர்கள் பிரகாகசிக்கவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்துக்காக தனது அறிமுகப் போட்டியில் விளையாடும் ரெஹான் அஹ்மத் துல்லியமாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
பாகிஸ்தான் 1ஆவது இன்: 304 (பாபர் அஸாம் 78, அகா சல்மான் 56, அஸார் அலி 45, ஷான் மசூத் 30, ஜெக் லீக் 140 - 4 விக்.)
இங்கிலாந்து 1ஆவது இன்: 354 (ஹெரி ப்றூக் 111, பென் போக்ஸ் 64, ஒல்லி போப் 51, மார்க் வூட் 35, நவ்மான் அலி 126 - 4 விக்., அப்ரார் அஹ்மத் 150 - 4 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: 216 (பாபர் அஸாம் 54, சவூத் ஷக்கீல் 53, ரெஹான் அஹ்மத் 48 - 5 விக்., ஜெக் லீச் 72 - 3 விக்.)
இங்கிலாந்து 2ஆவது இன்: வெற்றி இலக்கு 167, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 112 - 2 விக். (பென் டக்கட் 50 ஆ.இ., ஸக் க்ரோவ்லி 41, பென் ஸ்டோக்ஸ் 10 ஆ.இ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM