இந்திய அணியின் மிகச்சிறப்பான பந்துவீச்சினால் இன்னிங்ஸ் வெற்றிபெற்று இங்கிலாந்து அணியுடனான  5 டெஸ்ட்கள் கொண்ட தொடரையும் இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியிற்கும், இந்திய அணியிற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி மும்பாய் மைதானத்தில்  இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் குக் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

ஆரம்பம் முதலே மிக சிறப்பாக ஆட்டத்தை ஆரம்பித்த  இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களை இழந்து 400 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.

அஸ்வின் 6 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர் .

தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணிக்கு முரளி விஜய் (136),விராட் கோஹ்லி 235, ஜெயந்த் ஜாதவ் 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இந்தியா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 631 எனும் வலுவான நிலையை எட்டியது.

பதிலுக்கு தமது 2 வது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து நேற்று முன்தினம் 4 ஆம் நாள் நிறைவில் முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்கள் பெற்று தடுமாறியது.இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 49 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

போட்டியின் இறுதி நாளான நேற்று காலையில் இந்தியாவின் சூழல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 195 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி,ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 3-0 என்று முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைபற்றினார். போட்டியின் ஆட்ட நாயகன் விருதை விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.