கனடாசெல்ல முயன்று வியட்நாம் கடற்பரப்பில் கைதாகி உயிரை மாய்த்தவரின் சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம்

Published By: Vishnu

19 Dec, 2022 | 04:55 PM
image

வியட்நாமில் உயிரை மாய்ந்த்துக்கொண்ட  சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.

அதனையடுத்து அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். 

அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்திருந்தனர்.

அதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்டநாட்களிக் பின்னர் இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. 

அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி கிரிகைகள் நடைபெற்று , சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04