நடுக்கடலில் தத்தளிக்கும் ரொகிங்யா அகதிகளின் படகு- சிறுவர்கள் மரணம் - ஐநா தகவல்

Published By: Rajeeban

19 Dec, 2022 | 02:12 PM
image

150 ரொகிங்யா அகதிகளுடன் தத்தளித்துக்கொண்டிருக்கும் படகொன்றிற்கு அந்தமான் கடற்பரப்பில் உள்ள நாடுகள் உதவவேண்டும் என ஐநா  வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பிட்ட படகு இரண்டு வாரகாலமாக நடுக்கடலில் தத்தளிக்கின்றது என ஐநா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட படகிலிருந்து தொடர்புகொண்டவர்கள் தங்களில் பலர்  உயிரிழந்துள்ளனர் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

படகில்உணவு குடிநீர் போன்றவை முற்றாக தீர்ந்துவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சிறிய மீன்பிடி படகு மூன்று வாரங்களிற்கு முன்னர் பங்களாதேசிலிருந்து புறப்பட்டது மூன்று வாரங்களாக கடலில் தத்தளித்தவண்ணமுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

படகில் உள்ளவர்கள் மலேசியா செல்ல முயல்கின்றனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

திறந்த படகாக அது காணப்படுகின்றது படகு புறப்பட்ட சில நாட்களில் அதன் இயந்திரம் பழுதடைந்துவிட்டது என ஐநா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட படகு இந்து சமுத்திரத்தை நோக்கி அந்தமான் கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது பங்களாதேசில் உள்ள ரொகிங்யா செயற்பாட்டாளர் படகில் உள்ளவர்களை தொடர்புகொண்டுள்ளார் படகில் உள்ளவர்கள் நாங்கள் உயிரிழந்துகொண்டிருக்கின்றோம் ஒருவாரகாலமாக உணவுண்ணவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு...

2025-11-13 17:56:17
news-image

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா...

2025-11-13 16:09:16
news-image

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத...

2025-11-13 13:41:46
news-image

கானாவில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - சன...

2025-11-13 16:05:49
news-image

சைப்ரஸில் நிலநடுக்கம் 

2025-11-12 17:26:28
news-image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில்...

2025-11-12 16:09:57
news-image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை...

2025-11-12 16:06:26
news-image

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட...

2025-11-12 14:32:17
news-image

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் -...

2025-11-12 12:17:16
news-image

எகிப்தில் சுற்றுலா பஸ் மீது லொறி...

2025-11-12 11:43:56
news-image

இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து...

2025-11-12 09:40:53
news-image

டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்!

2025-11-11 12:02:26