எம்மில் பலருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் என்பது கானல் நீராகிவிடும். திறமைகள் இருந்தும்... வாய்ப்புகள் கிடைத்தும்... கடினமாக உழைத்தும்... உரிய பலன்கள் கிடைக்கவில்லை என்றால்..! என்ன செய்வார்கள்? உடனடியாக தங்களது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அனுபவிக்க ஜோதிடர்களை நாடுவார்கள். அவர்கள் ஜாதகத்தை துல்லியமாக அவதானித்து, உங்களுக்கு முடக்கு எனப்படும் தடை இருக்கிறது. இதனை உரிய பரிகாரங்களின் மூலம் நீக்கினால் தான் உங்களுக்கான சுப பலன்கள் முழுமையாக கிடைக்கும் என்பார்கள்.
முடக்கு குறித்து ஜோதிடர்களிடையே பல வகையான கருத்துகள் இருக்கிறன. ‘முடக்கு - ஒருவரது வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி விடுவதில்லை’ என்று ஒரு பிரிவினரும், ‘முடக்கு - என்பது ஒரு தற்காலிக தடையே தவிர, நிரந்தரமானதல்ல’ என மற்றொரு பிரிவினரும், ‘முடக்கு என்பது வெற்றியை ஒருபோதும் தடுக்க வல்லதல்ல. அது குறித்த முழுமையான விழிப்புணர்வு இருந்தால் எளிதாக அதனை எதிர்கொள்ள இயலும்’ என்று மற்றொரு பிரிவினரும் தங்களது கருத்துகளை முன்மொழிகிறார்கள்.
இந்நிலையில் முடக்கு என்பது என்ன? என்று முதலில் அறிந்து கொள்வோம். முடக்கு என்பது ஜோதிட கணிதத்தின் படி, உங்களது ஜாதகத்தில் சூரியன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதனை முதலில் பார்க்க வேண்டும். அதிலிருந்து மூல நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரமாக வருகிறது என்று எண்ணி பார்க்க வேண்டும். இந்த எண்ணிக்கையை மூலத்திற்கு அடுத்த நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்திலிருந்து எண்ணத் தொடங்க வேண்டும். அதன் பிறகு எந்த நட்சத்திரம் உங்களின் எண்ணிக்கையில் வருகிறதோ… அந்த நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தின் அதிபதி முடக்கு அதிபதி. அந்த ராசிநாதன் முடக்கு ராசி அதிபதி. அந்த ராசி முடக்கு ராசி.
இதனை ஒரு எளிய உதாரனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களது ஜாதகத்தில் சூரியன் மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எத்தனை நட்சத்திரம் இருக்கிறது என எண்ண வேண்டும். (உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம் ) அந்த வகையில் உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் மூலம் நட்சத்திரம் வரை 21 நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறது. தற்போது முடக்கு ஜோதிட கணிதத்தின் படி மூல நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்தில் இருந்து 21 வது நட்சத்திரம் ( பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம் ) முடக்கு நட்சத்திரம். எனவே இந்த உதாரண ஜாதகத்திற்கு ஹஸ்தம் நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம். இந்த நட்சத்திராதிபதி புதன் முடக்கு நட்சத்திராதிபதி. இந்த ராசியான கன்னி ராசி முடக்கு ராசி என்பதனை பட்டியலிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தருணத்தில் ஜோதிடர்கள் முடக்கு ராசியில் உள்ள கிரகங்களும், அதன் அதிபதி கிரகமும், நட்சத்திராதிபதி கிரகமும், முடங்கி போய்விடும் என்றும், அதன் ஆதிபத்தியமும், காரகத்துவமும் முடங்கிவிடும் என்றும், பலன்கள் உரிய முறையில் கிடைக்காது என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஜோதிடர்களின் இந்த வாக்கு பெரும்பாலான ஜாதகர்களுக்கு வாக்கு பலிதமாவதில்லை. ஏனெனில் ஜோதிடத்தில் விதிகள் இருந்தால், விதிவிலக்குகளும் உண்டு. மேலும் முடக்கு என்பது அனைத்தையும் முடக்கிவிடும் அளவிற்கு வீரியமானதில்லை. தடை ஏற்படுத்துவதில் முடக்கு என்பது ஒரு சிறியஅளவிலான துணை விதி மட்டுமே. சில ஜாதகங்களில் அவர்களுக்கு பலவித வலிமையான யோக அமைப்புகள் இருந்தால், அவை தீவிரமாக சுப பலன் அளிக்குமே தவிர முடக்கினால் முடங்காது.
அதே போல் முடக்கு ராசிகளின் விதிவிலக்குகளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
• முடக்கு ராசி அதிபதி, ராகுவின் சாரத்தில் இருந்தால் முடக்கு பலவீனமாகும்.
• முடக்கு ராசியை சனி பார்த்தால் அல்லது சனியின் பார்வை கிடைத்தால் முடக்கு பலவீனமடையும்.
• முடக்கு நாதன், திதி, யோக கரண நாதனாக இருந்தால் அல்லது பார்வையில் இருந்தால் முடக்கு பலவீனமடையும்.
• உங்களது முடக்கு ராசி, இந்து லக்னத்தில் இருந்தால் முடக்கு, முடங்கி, நல்ல பலனையே அளிக்கும்.
• புஷ்கர அம்சத்தில் முடக்கு இருந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
• முடக்கு ராசியை ஆட்சி உச்சம் பெற்ற குரு பார்வையில் இருந்தால், முடக்கு தீய பலனை அளிக்காது
அதே தருணத்தில் உங்களுக்கு முடக்கு இருந்தால்.., எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால்.., முடக்கு ராசியின் அதிபதி கோச்சாரத்தில் பயணிக்கும் போது, முடக்கு ராசியின் முதல் பாதத்தை கடக்கும் கால கட்டத்தில்... மாய தடைகளை உருவாக்கும். இந்த கால அவகாசம் என்பது மூன்று நாட்களில் இருந்து அதிகபட்சம் இருபது நாட்களாக இருக்கும். இந்த கால கட்டத்தை அனுபவிக்க ஜோதிடர் ஒருவர் மூலம் துல்லியமாக அவதானித்து, அந்த காலகட்டத்தில் சுப காரியங்களை தொடங்குவதை தவிர்க்கலாம். மேலும் இந்த காலகட்டத்தில் அசுப பலன்கள் ஏற்படுவதை தடுக்க.., தகுந்த நபர்களுக்கு தகுந்த காலத்தில் தகுந்த அளவில் தனம், தானியம், வஸ்திரம், உலோகம் ஆகியவற்றை தானம் கொடுத்துவிட்டு ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனைத் தரிசனம் செய்வது சிறப்பு
அத்துடன் இந்த காலக்கட்டத்தில் பரிகாரம் செய்தால் சுப பலன்கள் நீடிக்கும். எனவே முடக்கு எனும் ஜோதிட ரீதியிலான தடையை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். இதையும் கடந்து முடக்கு இருப்பதாக உங்களுடைய உள்ளுணர்வு உணர்த்தினால், ஜோதிடர்களும், ஜோதிட முறைகளும் உங்களை குழப்பிவிட்டிருந்தால், உடனடியாக அருகில் இருக்கும் விநாயக பெருமானின் ஆலயத்திற்கு சென்று, அவரை மனம் உருக வேண்டி, தேங்காய் ஒன்றினை உடைத்து வந்தால் (சூரைத் தேங்காய்) உங்களுடைய முடக்கு நீங்கிவிடும்.
-சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM