நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

ஊவா மாகாணத்தின் குருத்தலாவையில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழா நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியனவற்றில் சில கட்டுப்பாடுகளை விதிக்க எம்மால் முடிந்தபோதிலும், இணையத்தளம் மற்றும் சமுகவலையத்தளங்களில் கூறும் விடயங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க  முடியாதுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எந்தவொரு கெட்டவார்த்தைகளையும் பொறுப்பற்ற விடயங்களையும் இன்று வெளியிடமுடியும்.

எனவே, இவர்களை அழைத்து தெளிவுபடுத்தும் நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்வார். 

அவ்வாறு அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதற்காக சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்வோம் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.