சீனாவின் குளிர்கால பகுதியில் மூன்று கொவிட் அலைகள் உருவாகக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதை தொடர்ந்து மக்கள் கடும் அச்சத்தில் சிக்குண்டுள்ளனர்.
கொவிட் பரவலை தடுப்பதற்கான கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து பெருந்தொற்று பரவல் தீவிரமாக உள்ள நிலையில் குளிர்காலத்தில் மூன்று மாதங்களிற்கு கொவிட் பெருந்தொற்று ஆபத்துள்ளதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முக்கிய நகரங்களில் மக்கள் பெருமளவிற்கு வீடுகளிற்குள்ளேயே தங்கியுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்.
தற்போதைய பெருந்தொற்று குளிர்காலத்தில் தீவிரமடையும் மூன்று மாதங்களிற்கு தொடர்ச்சியாக நீடிக்கும் என சீனாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான நிலையத்தின் தலைமை தொற்றுநோய் நிபுணர் வு சுன்யூ தெரிவித்துள்ளார்.
முதலாவது சுற்று தற்போதிலிருந்து ஜனவரி வரை நீடிக்கும் அதன் பின்னர் உடனடியாக இரண்டாவது அலை தாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் புதுவருடகாலத்தில் ( ஜனவரி 21) முதல் மில்லியன் கணக்கான மக்கள் பல பகுதிகளிற்கு செல்வதால் இந்த ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ள அதிகாரி பெப்ரவரியிலிருந்து மார்ச் வரை மூன்றாவது அலை காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன அதிகாரிகள் நாளாந்தம் 2000 நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என தெரிவிக்கின்ற போதிலும் பொதுமக்கள் மிகப்பெருமளவு நோயாளிகள் குறித்து தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM