அஜித் குமார் நடிப்பில் தயாராகி பொங்கலன்று வெளியாகவிருக்கும் 'துணிவு' படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் 'துணிவு'.
இதில் அஜித் குமாருக்கு ஜோடியாக 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, வீரா, பிரேம்குமார், மகாநதி சங்கர், ஜோன் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
வட இந்திய மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் சில தசாப்தங்களுக்கு முன் நடைபெற்ற நிஜ வங்கிக்கொள்ளை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகியுள்ள இந்த படத்தை பே வியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிள் ட்ரக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாடலாசிரியர் வைசாக் எழுதிய 'பொறக்குற நொடிலருந்து விரட்டுற காசு...' என தொடங்கும் இந்தப் பாடலை ஜிப்ரான் இசையில் பாடகர்களான வைசாக், ஜிப்ரான், நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
'காசேதான் கடவுளடா...' என தொடங்கும் பழைய பாடலின் பொருளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த பாடல் துள்ளல், ராப் இசை வடிவங்களுடன் இணைந்து தயாராகியிருப்பதால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இந்த பாடல் வெளியாகி 12 மணிநேரத்துக்குள் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.
இதனிடையே 'காசேதான் கடவுளடா...' என்ற இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியர் பாடுவது படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பாடலில் அவரது குரல் இடம்பெறவில்லை. இது தொடர்பாக மஞ்சு வாரியரின் ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ்களாக முறையிட, இதற்கு மஞ்சு வாரியர் உடனடியாக பதிலளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM