வவுனியாவில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு

Published By: Digital Desk 2

18 Dec, 2022 | 06:06 PM
image

வவுனியா மாமடு பகுதியில் வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) மீட்கப்பட்டுள்ளது.

மாமடு மலையார்பருத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் காணியினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மாமடு பொலிஸில் காணி உரிமையாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து பொலிஸாரினால் குறித்த கைக்குண்டு அகற்றப்பட்டு அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை மாமடு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right