காற்றழுத்தத்தால் கன மழையோடு காற்றும் வீசலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

Published By: Nanthini

18 Dec, 2022 | 07:32 PM
image

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தால் அப்பகுதியில் தொடர்ந்தும் பலத்த காற்று காணப்படுகின்றது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலை அடையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அத்தோடு நாட்டை சூழவுள்ள பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

இந்த காற்றழுத்த தாழ்ப்பகுதி காரணமாக கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இப்பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லி லீற்றருக்கும் அதிக கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டை சூழவுள்ள ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

சில பிரதேசங்களில் 75 மில்லி லீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அப்போதான இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும்.

அதேவேளை மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புக்களில் வடகிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றானது 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

இதேவேளை திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புக்களிலும், காங்கேசன்துறையில் இருந்து மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்பில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 55 வீதம் வரை அதிகரிக்கக்கூடும்.  

மேலும், மேற்குறிப்பிட்ட கடற்பரப்புக்கள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் ஓரளவுக்கு கொந்தளிப்பாக காணப்படுவதோடு,  அப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்கிறபோது பலத்த காற்றும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

எனவே, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புக்களில் கடலோடு தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இது தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புக்கள் குறித்தும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கப்படுகின்றனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04