(எம்.மனோசித்ரா)
பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 45 000 இற்கும் அதிகமான போதைப்பொருட்கள் தொடர்பான சுற்றிவளைப்புக்களில் , 90 744 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இவ்வாண்டில் இதுவரை (கடந்த வெள்ளிக்கிழமை வரை) 1441 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் 45 948 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தொடர்புடைய 45 801 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போன்று 11 881 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் 34 182 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றுடன் தொடர்புடைய 34 062 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 109 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் 10 576 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 10 532 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களால் ஒருவகை மருந்து உபயோகிக்கப்படுகிறது. அவ்வாறான ஒரு இலட்சத்து 1353 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே போன்று ஒரு இலட்சத்து 11 540 போதை மாத்திரைகளும் மீட்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் 349 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான சுற்றி வளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இதற்காக மக்களின் ஒத்துழைப்புக்களும் தொடர்ந்தும் எமக்கு கிடைக்கப் பெறுகின்றன. அதனை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM