வர்தா புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.
‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது.
இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை இரத்து செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் மலேசியா உள்பட சில நாடுகளில் இருந்து வரவேண்டிய விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
விமான போக்குவரத்து திடீரென இரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இதனிடையே புயலானது சென்னையை கடந்து திருவண்ணாமலை வழியாக தற்போது பெங்களூரை சென்று அடைந்துள்ளது. சென்னை நகரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், புயல் காற்று மற்றும் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM