12 வயது சிறுவன் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு : மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

Published By: Digital Desk 2

18 Dec, 2022 | 04:41 PM
image

இந்திய மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிந்த் என்ற மாவட்டத்தில் 4 வகுப்பு கற்று வரும் 12 வயது சிறுவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 15 ஆம் திகதி குறித்த மனிஷ் ஜாதவ் என்ற சிறுவன் பாடசாலையில் தனது சகோதரனுடன் இணைந்து மதிய உணவு உட் கொண்டுள்ளான். அதன் பின்னர், வீட்டிற்குத் திருப்பி செல்ல வாகனத்தில் சென்றபோது திடீரென அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட வாகன சாரதி பாடசாலை அதிகாரிகளிடம் தெரிவித்து சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சையாக சிபிஆர் அளித்துள்ளனர். ஆனால் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை. 

சிறுவனுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தைப் பற்றி மருத்துவர்கள் தெரிவிக்கையில்,

இது திடீரென ஏற்படும் மாரடைப்பு என்று தெரிவித்துள்ளனர் (Cardiac arrest). இதயத்தில் திடீரென electrical malfunction என்பது ஏற்பட்டு உடலுக்குச் செல்லும் இரத்தத்தை நிறுத்துவதால் ஏற்படுகிறது. இது மாரியான எஸ்.சி.ஏ (sudden cardiac arrest)சில காலங்களாகச் சிறுவர்கள் இடையே அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றம், சக்கரை நோய், மது அருந்துவது, புகைப்பிடித்தல் மற்றும் அதிகரிக்கும் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே எஸ்.சி.ஏ ஏற்படுகிறது. எஸ்.சி.ஏ என்பது மிகவும் ஆபத்தானது என்றும் அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் 6 நிமிடத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரபு வழியில் இதயம் தொடர்பான நோய் இருப்பவர்களுக்கு இது போன்று திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22
news-image

மதநிந்தனை குற்றச்சாட்டில் சுற்றுலாப்பயணி பொதுமக்களால் தாக்கப்பட்டு...

2024-06-21 22:09:05
news-image

வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா...

2024-06-21 15:24:57
news-image

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க முடியாது...

2024-06-21 13:18:28
news-image

இந்திய - இலங்கை சர்வதேச கடல்...

2024-06-21 14:09:55
news-image

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின்...

2024-06-21 10:40:21
news-image

டெல்லியில் வெப்ப அலை தாக்கத்துக்கு வீடு...

2024-06-21 10:33:26
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக...

2024-06-20 15:01:44
news-image

ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்றைய நாடு...

2024-06-20 13:29:41
news-image

மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது...

2024-06-20 11:39:04