தமிழினம் அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில் தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் - பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

Published By: Vishnu

18 Dec, 2022 | 04:40 PM
image

தமிழினம் அழிவின் விளிம்பிலிருந்து தப்ப வேண்டும் என்றால்  தமிழர் தாயம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

 

இன்று (18-12-2022) கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலம் காலமாக தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் ஆக்கிரமிப்புக்களும் தெடர்கின்றன.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் தமிழர் தாயகத்தின் மீதான நில ஆக்கிரமிப்புக்கள் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்தல் தொல்லியல் அடையாளங்களை ஆக்கிரமித்தல் அதன் அடையாளங்களை மாற்றுதல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

அழிவின் விளிம்பிலிருந்து தமிழ் இனத்தைபாதுகாக்க வேண்டும் அப்படி என்றால் நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் குறிப்பாக நிர்வாக அலகுகள் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (18-12-2022) பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களை வரவேற்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பாகி நடைபெற்றன.

இதில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கம் சசிகலா ரவிராஜ்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவனபவன் சாந்தி சிறீஸ்கந்தராஜா  இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாட்டாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04