சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 இலட்சம் வரை உயரும் - புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published By: Digital Desk 2

18 Dec, 2022 | 04:34 PM
image

சீனாவில் அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு சுமார் 10 லட்சம் கொரோனா மரணங்கள் நிகழலாம் என அமெரிக்காவின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யூஷனின் புதிய கணிப்புகளின்படி தகவல் வெளியாகியுள்ளது.

வூஹான் மாகாணத்தில் டிசம்பர் 2019இல் உருவான கொரோனா பாதிப்பு உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி சமூக கட்டுப்பாடுகளை விதிக்க வலி வகுத்தது. 2022இல் தான் முழுமையாக உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீனாவில் மீண்டும் நோய் பரவல் தொடர்ந்து வருகிறது.

சீனாவில் கடந்த மாதம் தினசரி நோயத்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டது. அதன் விளைவாக, அங்கு நோய் பரவல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறத் ஆரம்பித்தன. அதனால், சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்தி வருகின்றன.

இந்நிலையில் குரூப்ஸ் புரொஜக்ஷன் ஆய்வுக் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும். அதோடு சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதிலிருந்து கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. கடைசியாக டிசம்பர் 3ஆம் திகதி நிகழ்ந்த கொரோனா மரணங்களே பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சர்ச்சைக்குரிய ‘பூஜ்ய கொரோனா’ கொள்கை தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அடுத்த ஆண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 1.4 பில்லியன் (140 கோடி ) வரையும் நோய் தோற்றால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 1 மில்லியன் (10லட்சம்) வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை (டிச.16) முதல் தடுப்பூசிகளை அதிகரித்து வருவதாகவும், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்புக்களை உருவாக்குவதாகவும் கூறியது. ஆனால் இன்றும் சீன வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேருந்து நிலைய பயணிகள் மீது காரால்...

2025-03-24 16:03:22
news-image

சென்னையில்பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு...

2025-03-24 15:46:45
news-image

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு...

2025-03-24 14:39:33
news-image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக...

2025-03-24 13:15:46
news-image

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு தூதரகம் மூலம்...

2025-03-24 12:42:36
news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32
news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24