சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணை போக வேண்டாம் - உறவினர்களிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரிக்கை

Published By: Vishnu

18 Dec, 2022 | 12:21 PM
image

அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலைவாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குள் எமது உறவுகள் அகப்பட வேண்டாம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர்  ஊடக சந்திப்பு  ஒன்றை இன்று (18) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்தியிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்தவர்கள் எதிர்வரும் திங்கள் (19),செவ்வாய்(20) ஆகிய நாட்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் மக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலை வாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தொடர்பிலும் இங்கு கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34