(எம்.மனோசித்ரா)
நீர்கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றின் 8 ஆவது மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (டிச. 17) காலை நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆவது மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்த பெண், அதே வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்த பெண் நீர்கொழும்பு - அலுத்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த பெண் கடந்த 14 ஆம் திகதி வயிற்று நோ காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று சனிக்கிழமை காலை தங்கியிருந்த விடுதியிலிருந்து ஓடிச்சென்று, 8 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
கட்டடத்தின் தரைத்தள வளாகத்தில் விழுந்த குறித்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM