பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (17) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தில் இடம்பெற்றுள்ளது.
சமூகத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் குடும்ப வன்முறை, இளைஞர்களின் சமகால பிரச்சினைகள், போதைப்பொருள், வேலைவாய்ப்பின்மை, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினை, பாடசாலை இடைவிலகல் போன்ற பிரச்சினைகளும் அதற்கான சவால்கள், காரணங்கள், தீர்வுகள், தீர்வுகளினை பெறுவதில் எதிர்காலத்தில் பங்குதாரர்களின் பங்களிப்பு, நிதிதிரட்டல், பங்குதாரர்கள் விழுது நிறுவனத்தினரிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு விழுது உத்தியோகத்தர் நவரத்தினராசா சர்மியா தலைமையில் ஆரம்பமாகிய கலந்துரையாடலில் மாவட்ட பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர்கள், பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலகர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸார், ஊடகவியலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அமரா, சமாச, யுகசக்தி உறுப்பினர்கள், இளையோர், கிளிநாச்சி மாவட்ட விழுது உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்
விழுது அலுவலர் கந்தசாமி ஐங்கரன் நெறிப்படுத்தலில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM