சளி, இருமலை குறைக்க சில குறிப்புகள்...!

Published By: Ponmalar

17 Dec, 2022 | 04:54 PM
image

லேசான சளி, இருமல் இருந்தால், கைப்பிடியளவு புதினா இலைகளை உருவி, அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாகக் காய்ச்சி வடி கட்டவும். அதனுடன் உப்பு, மிளகுத் துாள் சேர்த்து, சுடச்சுட அருந்தலாம்.

 விரல் பருமன் அளவுள்ள சுக்கை இடித்து, அத்துடன், ஒரு டீஸ்பூன் மிளகு சேர்த்து, ஒன்றும் பாதியுமாக இடித்து, அதில் கைப்பிடியளவு துளசி இலை சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி வடிகட்டவும்.

அதனுடன் சிறிதளவு தேன், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால், தலைபாரம், அசதி குறையும்; லேசான ஜுரம் இருந்தாலும் குறைந்து விடும்.

முட்டைக்கோசை நறுக்கி வேக வைத்து வடித்த தண்ணீருடன், உப்பு, மிளகுத் துாள் சேர்த்து சூடாக மெதுவாக அருந்தலாம்; இதனால், தொண்டைக்கட்டு, சளி நன்கு கரையும்.

 நீளமான விரலி மஞ்சளை, நேரடியாக தணலில் நன்றாக சுட்டு, அதில் வரும் புகையை, நாசியால் மெதுவாக இழுத்தால், மூக்கடைப்பு உடனே குறையும்.

 கைப்பிடி அளவு ஆடாதொடா இலையை, புது மண்சட்டியில் வறுக்க வேண்டும். அதில், மூன்று டம்ளர் நீர் ஊற்றி, முக்கால் டம்ளர் ஆகும்படி சுண்டக் காய்ச்ச வேண்டும். லேசான துவர்ப்பும், கசப்புடன் இருக்கும் இந்த நீரை மூன்று வேளை, மூன்று நாட்கள் குடித்தால் போதும்... தொண்டைக் கமறல், சளி பறந்தே போகும்

இரவில் துாங்க விடாமல் தொடர்ந்து இருமல் வந்து படுத்துகிறதா... மிளகை நன்கு பொடித்து, சிறிது தேனில் குழைத்து நக்கிச் சாப்பிடவும்.

பின், சூடான தண்ணீர் குடித்தால், இருமல் குறையும்; துாக்கமும் நன்றாக வரும்

உடல் உஷ்ணத்தால் வரும் இருமலுக்கு, பனங்கற்கண்டை இடித்து, பசும்பாலில் கலந்து, அதனுடன் மஞ்சள் துாள் சேர்த்து நன்றாக கொதித்த பின், மிளகுத் துாள் கலந்து அருந்தலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு இடித்து, தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி வடிகட்டி அருந்தினால், இருமல் மற்றும் சளியை கட்டுக்குள் வைக்கும்.

வெற்றிலை, கற்பூரவல்லி, திருநீற்றுப் பச்சிலை, துளசி, இஞ்சி, மிளகு, சீரகம், மஞ்சள்ஆகியவற்றை இடித்து கஷாயமாக காய்ச்சி வடிகட்டவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்து அருந்தலாம்.

மேலே சொல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும், நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்; சளி, இருமலையும் குறைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-02-15 18:38:50
news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14