(லியோ நிரோஷ தர்ஷன்)

விகிதாசாரப் பிரதிநித்துவ முறைமையின் ஊடாக  கணிசமான சிறுபான்மை பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான சந்தர்ப்பத்தை  மறைந்த தலைவர்  அஷ்ரப்பின் மூலமே பெற்றுக் கொள்ள முடிந்தது. எமது மறைந்த தலைவர் பெற்றுத் தந்த உரிமையை இழப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோது தயாராக இல்லையென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் இனவாத செயற்பாடுகள்  மூலம் சிறுபான்மையினர்  ஏற்கனவே அச்சத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களின் அரசியல் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

தற்போது சில பிரதான கட்சிகள் தொகுதிவாரி  தேர்தல் முறைமைக்கு ஆதரவாகவும் அதனையே செயற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையினாலேயே இந்த அச்சம்  தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.