காளான் சூப்

Published By: Ponmalar

17 Dec, 2022 | 03:26 PM
image

தேவையான பொருட்கள்:

காளான்- 200 கிராம்

ஸ்வீட் கோர்ன்- 100 கிராம்

பால்- 1 கிண்ணம்

கிரீம்- 50 கிராம்

சோள மா- 2 மேசைக் கரண்டி

பூண்டு- 5 பல்

மிளகுத்தூள், உப்பு- தேவையான அளவு

ஒலிவ் எண்ணெய்- 1 மேசைக் கரண்டி

செய்முறை: 

காளான் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். 

வாணலியில் ஒலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு போட்டு வதக்கவும்.  

பிறகு காளான், பால், ஸ்வீட் கோர்ன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துவிடவும். 

சோள மாவை பாலில் கலக்கி கலவையில் சேர்க்கவும். 

இது கெட்டி பதத்துக்கு வந்ததும் கிரீம், மிளகு தூள், உப்பு சேர்த்து பரிமாறவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்