Excel World ஸ்னோ வேர்ல்ட்டை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது

Published By: Digital Desk 5

17 Dec, 2022 | 05:04 PM
image

மிகுந்த பனிப்பொழிவுக்கும் குளிர்கால வேடிக்கைகளுக்கும்  மத்தியில், அனைவரும் எப்போதும் விரும்புகின்ற ஸ்னோ வேர்ல்ட்டை மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் அண்மையில் எக்செல் வேர்ல்ட் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

டி.பி. ஜயா மாவத்தையில் அமைந்துள்ள எக்செல் வேர்ல்டில் டிசம்பர் 12 ஆம் திகதியன்று பிரத்தியேகமாக ஊடகங்களுக்கு மாத்திரம் இடம்பெற்ற நிகழ்வுடன் நத்தார் பாப்பா வேடிக்கைகளுடன் இணைந்த பனிக்கால அனுபவத்தை வழங்குவதற்காக, மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களைச் ஒன்றுசேர்த்து, பனிக்கால இடம் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவைக்கப்பட்டது. 

முதன்மை அனுசரணையாளரான  பெப்சி கம்பனி,  மற்றும் முக்கிய ஊடக அனுசரணையாளரான வொய்ஸ் ஒப் ஏசியா நெட்வேர்க், மற்றும் முன்னணி ஊடகப் பிரமுகர்கள், எக்செல் உணவகங்கள் மற்றும் பிரவுன்ஸ் குழும அதிகாரிகளுடன் இணைந்து  மீண்டும் அறிமுகப்படுத்தும் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வானது உறைபனி கருப்பொருளொன்றை மையப்படுத்தி பாரம்பரிய விளக்குகளுக்கு பதிலாக பணிவிளக்கு ஒளிர்ந்து, பெண்கள் நடனக் குழுவான Tuuryaa குழுவினரின் மகிழ்வைத் –தூண்டும் நடன நிகழ்ச்சி, அனைவருக்கும் பனிக் கிளர்வூட்டப்பட்ட  சிற்றுண்டி விருந்துபசாரம் என பல அற்புதமான நிகழ்ச்சிகள் நிறைந்ததாக அமைந்திருந்தது.  

ஒருபோதும்  பனி நிறைந்த சூழல் அனுபவத்தைப் பெற்றிராத  அனைத்து வயதினருக்கும் பனிக்கட்டிகள்  நிறைந்த சூழலை அனுபவிக்கும்  வாய்ப்பினை வழங்கும் இலங்கையின் ஒரே இடமாக இடம்பெறுவதே ஸ்னோ வேர்ல்டின் தனித்துமாகும். 

உறைபனிச் சூழலை அனுபவிக்கவும்  பண்டிகை வேடிக்கைகளுக்காகவும் இவ்விடம் பொதுமக்களுக்காக  டிசம்பர் 13 தொடக்கம் 31 வரை பி.ப 5-10 மணி வரை  திறக்கப்பட்ட்டிருக்கும்.  இது தவிர, முழு குடும்பத்திற்கெனவும் வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளையும்  பொழுதுபோக்குகளையும் கொண்ட "பண்டிகை கார்னிவெல்"  நிகழ்வையும்  டிசம்பர் மாதம் முழுவதும் எக்செல் வேர்ல்ட் நடாத்தும். 

கொழும்பின் பிரபல்யமான, முழுக் குடும்பத்திற்குமான  பொழுதுபோக்கு பூங்காவான எக்செல் வேர்ல்ட், Excel Restaurants Ltd. நிறுவனத்திற்கு சொந்தமானதும் அதன் மூலம் நிர்வகிப்படுவதுமாகும். 

Excel Restaurants Ltd., பிரவுன்ஸ் குழுவிற்கு சொந்தமானது, இது இலங்கையின் மிகப்பெரிய பல்வகைப்பட்ட பல்கூட்டு நிறுவனங்களில் ஒன்றான LOLC இன் ஒரு பிரிவாகும்.

Browns குழுவானது,  மின் உற்பத்தி, இல்லம் மற்றும் அலுவலக தீர்வுகள், விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் துணைச் சேவைகள், மருந்துப்பொருட்கள், முதலீடுகள், கடல்சார் மற்றும் தயாரித்தல் அதேபோன்ற ஓய்வு மற்றும் விருந்தோம்பல் போன்ற பல முக்கிய தொழிற்துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் மதிப்புமிக்க வர்த்தக வர்த்த்தகநாமங்களை நிர்வகிக்கின்ற நிறுவனமாகும். 

இந்நிகழ்வு எக்செல் வேர்ல்ட் அன்ட் பிரவுன்ஸ் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் – தொழிற்பாட்டு உன்னதத்திற்கான  பிரதானி தேவிகா டி அல்விஸ் சேலன்,  வருண் பெவரேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெடின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் - ஆர்.விஸ்வநாத் , எக்செல் வேர்ல்ட்  குழு நிறைவேற்றுப் பணிப்பாளர்  மற்றும் பிரவுன்ஸ் ஹோட்டல்ஸ்  அன்ட ரிசோர்ட்ஸ் குழுப் பொது முகாமையாளர்  எக்சத் விஜேரத்ன,  எக்செல் வேர்ல்ட், நிறைவேற்று அலுவலர் பாபா கரிம், வருண் பெவரேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடின்  வியாபார அபிவிருத்தி  சிரேஷ்ட முகாமையாளர்  தாரக சில்வா, வருண் பெவரேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடின்  விற்பனைகள் பொது முகாமையாளர் சமந்த பண்டார,  வருண் பெவரேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடின்   பிராந்திய விற்பனைகள் முகாமையாளர் சுமுது பெரேரா,  - சியத்த எப்.எம் சந்தைப்படுத்தல் தலைவர் லக்ஷன சமரசிங்க ,    சியாதா டிவி, நிகழ்ச்சிப் பணிப்பாளர்  பிரசன்ன ஜயனெத்தி - ஸ்டார் தமிழ் வானொலியின் எஸ். நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எக்சத் விஜேரத்ன -  எக்செல் வேர்ல்ட்  குழு நிறைவேற்றுப் பணிப்பாளர்  மற்றும் அன்ட் பிரவுன்ஸ் ஹோட்டல்ஸ்  குழுப் பொது முகாமையாளர்  

பிரசன்ன ஜயனெத்தி - சியாதா டிவி, நிகழ்ச்சிப் பணிப்பாளர்  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57