(இராஜதுரை ஹஷான்)
2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூன்று அரசியல் கட்சிகள் கூட்டணியாக போட்டியிட பிரதான அரசியல் கட்சிகளுடன் தற்போது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியை தவிர ஏனைய அரசியல் கட்சிகள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட அதிக கவனம் செலுத்தியுள்ளன.
ஸ்ரீலங்கா பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக கொள்கை அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவதில் தவறேதும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஏற்பார்கள்,ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணியை அமைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையிலான பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தற்போது ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,இலங்கை மேலவை கூட்டணி,மற்றும் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஒன்றிணைந்து கூட்டணியை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான இலங்கை மேலவை கூட்டணியினர் டலஸ் அழகபெரும தரப்பினருடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் கடந்த வாரம் இலங்கை கம்யூனிச கட்சி கட்சி காரியாலயத்தில் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் சிவில் தரப்பினர் மற்றும் புதிய அரசியல் தரப்புடன் கூட்டணி அமைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM