அச்சத்திலும் சந்தோசத்திலும் மக்கள் : 32 வருடங்களின் பின்னர் வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்

Published By: MD.Lucias

12 Dec, 2016 | 11:54 AM
image

வவுனியா, நெடுங்கேணி ஒலுமடு  கிராமத்தில் ஒரு தொகை முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இதனால் ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.

 இதேபோன்று 1984 ஆம் ஆண்டு முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இக் காலப்பகுதியில்  மக்கள் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 32 ஆண்டுகளின் பின்னர் தற்போது  அதிகப்படியான பழம் காய்த்துள்ளமையால் 1984 ஆண்டு ஏற்பட்ட வறட்சி போன்று தற்போதும் ஏற்பட்டு விடுமா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 இதேவேளை குறிப்பிட்ட சிலர் பழங்களை பிடுங்கி ஒரு கிலோகிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள். 

மேலும்  ஒரு சிலர் பழங்களை பிடுங்குவதற்காக மரம் அறுக்கும் கருவியை பயன்படுத்தி   மரங்களை அறுத்து விழுத்துவதனால்  அவ்விடத்தில் பொலிசாரும், வனவள பகுதியினரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 நெடுங்கேணி ஒலுமடு, ஊஞ்சால்கட்டி, மருதோடை, காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம், முல்லைத்தீவு  தண்ணிமுறிப்பு பகுதிகளிலும்  முரளிப்பழம் பழுத்து குலுங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55