(நெவில் அன்தனி)
இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்றுவரும் குறைபார்வை உடையோருக்கான இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை, அரை இறுதியில் பங்களாதேஷிடம் 64 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
சீரற்ற காலநிலை காரணமாக பெங்களூர் எஸ் எஸ் ஈ கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற அரை இறுதிப் போட்டி அணிக்கு 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது.
சல்மான, மொஹமத் அஷிக்கூர் ரஹ்மான் ஆகிய இருவரும் 81 பந்துகளில் 154 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ரஹ்மான் 46 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களையும் சல்மான் 39 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
மிகவும் கடுமையான 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இலங்கையின் அதிசிறந்த ஆரம்ப வீரர்களான சுரங்க சம்ப்பத், ருவன் வசன்த ஆகிய இருவரும் அரை இறுதிப் போட்டியில் பிரகாசிக்கத் தவறியமை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
வசன்த 24 ஓட்டங்களையும் சம்ப்பத் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த சுற்றுப் போட்டியில் இந்தியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நேபாளம் ஆகிய நாடுகளும் பங்குபற்றியதுடன் லீக் சுற்றில் இந்தியாவிடம் மாத்திரமே இலங்கை தோல்வி அடைந்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM