மக்களின் ஒட்டுமொத்த வருமானத்தையும் சுரண்டுவதே அரசாங்கத்தின் நோக்கம் - காவிந்த ஜயவர்தன

Published By: Digital Desk 5

16 Dec, 2022 | 05:08 PM
image

(எம்.மனோசித்ரா)

வங்குரோத்தடைந்துள்ள நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கும் கலாசாரமே தற்போது காணப்படுகிறது.

மறைமுக வரி பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மாத்திரமின்றி , நேரடி வரியையும் அதிகரித்து மக்களிடமிருந்து அவர்களது ஒட்டுமொத்த வருமானமும் அரசாங்கத்தினால் சுரண்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பணவீக்கம் 80 சதவீதமாக அதிகரித்துள்ளதன் பின்னணியில் , வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்ய முடியாத நிலைமையிலேயே இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் வரி சலுகைகளைப் பெற்றுக் கொண்ட செல்வந்தர்கள் அதன் மூலம் மக்களுக்கு எவ்வாறு நிவாரணத்தை வழங்கினர் என்பது தொடர்பில் எந்த விடயமும் கூறப்படவில்லை.

பொருளாதாரக் கொலைக்கு பிரதான காரணமான முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராக இதுவரையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஆகக் குறைந்தது 1000 - 2000 கட்டணத்தை செலுத்த வேண்டியவாறு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. 

மறுபுறம் மார்ச்சில் முழு நேர மின் துண்டிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. ஆனால் இதனை தவிர்ப்பதற்கு தம்மிடமுள்ள வேலைத்திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை.

சேதனப் பசளையின் மூலம் பசுமை விவசாயத்தை மேம்படுத்துவதாகக் கூறி விவசாயத்தை முற்றாக சீரழித்துள்ளதோடு , சீனாவிற்கு 9.6 மில்லியன் டொலரையும் செலுத்த வேண்டிய நிலைமையையே இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சுமார் 80 ரூபாவாகக் காணப்பட்ட அரிசியின் விலை இன்று 200 ரூபாவை விட அதிகரித்துள்ளது.

தற்போது வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் , விவசாயிகளுக்கு தமது நெல்லை குறைந்த விலைக்கு கூட விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதே போன்று முட்டை, பால் போன்ற ஏனைய உற்பத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உணவு உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்தி அனைத்தையும் இறக்குமதி செய்வதே இந்த அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47
news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19