தலவாக்கலை ஒலிரூட் மேற்பிரிவு தோட்டத்தில் பழமை வாய்ந்த மரம் ஒன்றினை தோட்ட நிர்வாகமும் பொது மக்களும் இணைந்து வெட்ட முற்பட்டபோது அம் மரம் உடைந்து தோட்ட குடியிருப்புகளின் மீது விழுந்ததில் மூன்று வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டத்தில் தோட்டக் குடியிருப்புகள் மீது பழமை வாய்ந்த மரம் ஒன்று உடைந்து விழும் அபாயம் தோன்றியதால் தோட்ட நிர்வாகமும், தோட்டத் தொழிலாளர்களும் அந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதற்கிணங்க வியாழக்கிழமை (14) மாலை குறித்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்த போது குறித் மரம் உடைந்து தோட்ட குடியிருப்புகள் மீது விழுந்துள்ளது.
குறித்த மரம் வெட்டும் போது தோட்ட குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டமையால் எவருக்கும் உயிர் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை, ஆனால் குடியிருப்புகள் மற்றும் அதிலிருந்த சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அக்குடியிருப்புகளில் வசித்து வந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்து தற்போது அத்தோட்ட வாசிகசாலை மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த அனைத்தும் தோட்ட குடியிருப்புகளும் தோட்ட நிர்வாகத்தின் செலவில் புனரமைக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM